Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாரியோவில் பனிப்பொழிவு தொடர்பில்  விடுத்துள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவில் பனிப்பொழிவு தொடர்பில்  விடுத்துள்ள எச்சரிக்கை

19 மாசி 2024 திங்கள் 09:42 | பார்வைகள் : 6545


ஒன்றாரியோவில், பனிப்பாறை உருகுதல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றாரியோவின் நோர்த் பே மரினா பகுதியில் பனி படர்ந்த பகுதிகளில் பயணம் செய்யக் கூடிய விசேட ஊர்தி நீரில் மூழ்கியுள்ளது.

எனினும், இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பனிபடர்ந்த பகுதிகள் பாதுகாப்பானதல்ல தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பனிபடர்ந்த நீர் நிலைகளில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவினால் மூடப்பட்ட நீர் நிலைகளின் மேற்பரப்பில் நடமாடுவது , விளையாடுவது, வாகனம் செலுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்