ஜப்பானில் ஆண்களின் நிர்வாண திருவிழா தொடர்பில் அதிர்ச்சி தகவல்
19 மாசி 2024 திங்கள் 09:58 | பார்வைகள் : 3877
ஜப்பான் நாட்டில் இருக்கும் ஒரு வினோதமான பழக்கம் தான் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிர்வாண திருவிழா.
ஜப்பானில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் ஒரு பாரம்பரிய சடங்காக ஒரே இடத்தில் பல ஆயிரம் ஆண்கள் நிர்வாணமாக ஒன்று கூடுவார்கள்.
இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், நிர்வாணமாகவும் வியர்வை சிந்தியும், தாலிஸ்மன்கள் எனப்படும் பையில் மல்யுத்தம் செய்து கொள்வார்கள்.
மேலும், சண்டையிடும் போது "தீமை, போய்விடு" என்று கோஷமிடுவார்கள்.
இது ஜப்பானைத் தாண்டி உலகளவில் புகழ்பெற்ற ஒரு திருவிழா.
இந்த திருவிழாவைப் பார்க்கவே உலகின் பல நாடுகளில் இருந்தும் மக்கள் ஒன்றுகூடுவார்கள்.
வடக்கு ஜப்பானின் இவாட் பகுதியில் உள்ள கோகுசேகி கோயிலில் உள்ள ஒரு காட்டில் இந்த சடங்கு நடக்கும்.
இதற்கிடையே இந்த சடங்கை முடிக்க அந்த கோயில் தேவஸ்தானம் முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதை ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தாலும், இந்த நிகழ்வில் வயதானவர்கள் பங்கேற்பது மிகவும் கடினமாகிவிட்டது.
எனவே, கோயில் நிர்வாகம் இந்த சடங்கை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் மக்கள்தொகை சரிவு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் தொடங்கிப் பல விஷயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் இதை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மற்ற நாடுகள் நிலைமையைச் சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து வருவோரை அனுமதிக்கிறார்கள்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை அந்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதுவே அந்நாட்டிற்கு பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது.
இந்த சிக்கலால் ஜப்பான் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்த லிஸ்டில் இப்போது இந்த விசித்திரமான திருவிழாவான "சோமின்சாய்" திருவிழாவும் இணைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியம் இப்போது முடிவுக்கு வருகிறது.
என்னதான் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் கூட அங்குள்ள கிராமங்களில் மக்கள்தொகை ரொம்பவே குறைவாகவே இருக்கிறது.
யாரும் அங்குள்ள கிராமங்களில் செட்டிலாக விரும்புவதில்லை.
இதற்காக ஜப்பான் அரசே ஊக்கத்தொகை கொடுத்து இந்த கிராமங்களில் சென்று செட்டில் ஆகுங்கள்.
குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றாலும் அதற்குப் பலன் இருப்பதில்லை.
மக்கள்தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. இதன் காரணமாகவே இப்போது இந்த பல ஆயிரம் ஆண்டு பாரம்பரிய நிர்வாண திருவிழாவும் முடிவுக்கு வந்துள்ளது.