உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு
19 மாசி 2024 திங்கள் 10:10 | பார்வைகள் : 2201
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் உலகின் பல நாடுகள் திண்டாடி வருகின்றன.
ஆனாலும் ஒரு சில நாடுகளின் மக்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஐரோப்பிய நாடு ஒன்று தங்கள் மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
பின்லாந்து என்ற நாடு தான் மக்கள் நிம்மதியாக வாழும் நாடு எனும் பெயரை 6 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது. இதற்கு காரணம் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, அரசின் நடவடிக்கையும் தான்.
உளவியலாளர் Frank Martela மூன்று முக்கிய காரணங்களை பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முன் வைக்கிறார்.
இந்நாட்டு மக்களுக்கு ஒற்றுமை உணர்வு இருக்கும். இது அவர்களுக்கு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்த்து போராடும் வலிமையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
தங்களை சுற்றியுள்ள நபர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இந்நாட்டு மக்கள் சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்படுகின்றனர். அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்று கூறுவதால், பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகின்றனர்.
பின்லாந்து மக்கள் தங்கள் அண்டை வீட்டாருடன் நேரம் செலவிட்டு, மகிழ்ச்சியாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏனெனில், தங்களது பிரச்சனைகளை பிறரிடம் கூறும்போது பாரம் குறைந்து அவர்களுக்கு நிம்மதி கிடைக்குமாம். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு உடனடியாக செயல்படுகிறதாம்.
எப்போதும் குடிமக்களுக்கு உதவ அரசு தயாராக இருப்பதால் மக்கள் கவலையின்றி இருக்கிறார்கள். இங்கு வாழும் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.
அதாவது அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கும், குறைவாக சம்பாதிப்பவர்களுக்கும் வித்தியாசம் பார்க்கப்படுவதில்லை.
இந்நாட்டில் ஏழ்மை இல்லை என்பதுடன், ஊழல் குறைவாகவே இருப்பதும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணம் ஆகும்.