பயங்கரவாதத்தைத் தடுத்த வீரர்களிற்கு மதிப்பளிப்பு!!
19 மாசி 2024 திங்கள் 10:46 | பார்வைகள் : 9783
இன்று திங்கட்கிழமை பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன், வீரப்பதக்கங்கள் வழங்குவதற்காக அராஸ் (ARRAS - Pas-de-Calais) சென்றுள்ளார்.
பா-து-கலேயின் காவற்துறை மாவட்டத் தலைமையகத்தில் (préfecture du Pas-de-Calais) கடந்த ஒக்டோபர் 13ம் திகதி தாக்குதலின் போது விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவற்துறை வீரர்கள் இன்று உள்துறை அமைச்சரால் கௌரவிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்வில் கடல்கடந்த மாகாணங்களிற்கான அமைச்சரும் கலந்து கொள்கின்றார்.

கடந்த 13ம் திகதி ஒக்டோபர் மாதம் செச்சீனியனான மொஹமத் மோகுச்கோவ் என்ற இஸ்லாமியப் பயங்கரவாதி, அராசிலுள்ள கம்பெத்தா லிசேக்குள் நுழைந்து 'அல்லாஹ் அக்பர்' என்று கத்திவிட்டு பேராசிரியர் தொமினிக் பேர்னாரினை கொன்று விட்டு மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளான்.

உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு. பயங்கரவாதியைக் கைது செய்ததுடன், மேலதிகத் தாக்குதல்களைத் தடுத்த, 9 காவற்துறை வீரர்களே இன்று உள்துறை அமைச்சரினால் வீரப்பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட உள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan