இலங்கையில் ஒரு பகுதியில் நிலநடுக்கம்? அதிர்ந்த வீடுகள்

3 ஆவணி 2023 வியாழன் 08:59 | பார்வைகள் : 7343
அம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் நேற்று இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருகில் உள்ள பல வீடுகளுக்கும் இந்த சத்தம் கேட்டது. இது மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வினவிய போது, அவ்வாறான நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025