Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய அதிபரை விமர்சிக்கும் நபரின் உடல் கண்டுபிடிப்பு...!

ரஷ்ய அதிபரை விமர்சிக்கும் நபரின் உடல் கண்டுபிடிப்பு...!

19 மாசி 2024 திங்கள் 10:59 | பார்வைகள் : 3769


ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சிப்பவரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸ் நவல்னி திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், அலெக்சியின் மரணத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் காரணமாக இருக்கக்கூடும் என குற்றம் சாட்டினர்.

புடினை எதிர்ப்பவர்கள் மாயமாவதும், சிறையிலடைக்கப்படுவதும், உயிரிழப்பதும் வழக்கமாகிவிட்டது என்று கூறியுள்ளார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த அலெக்சியின் உடலை வாங்குவதற்காக அவரது தாயாரும், சட்டத்தரணியும் பிணவறைக்குச் சென்றதாகவும், பிணவறை அலுவலர்களோ, அங்கு அலெக்சியின் உடல் இல்லை என்று கூறிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், அலெக்சி அடைக்கப்பட்டிருந்த சிறைக்கருகில் இருக்கும் மருத்துவ உதவிக்குழுவினர் சிலர், தாங்கள் அலெக்சியின் உடலைப் பார்த்ததாகவும், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சி உருவாகியுள்ளது.

அலெக்சியின் உடல் தொடர்பாக விசாரிக்கச் சென்ற அவரது சட்டத்தரணிகளான வேறு சிலரிடம், அவரது மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

 அது தொடர்பாக மேலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

பின்னர், ஆய்வு முடிந்துவிட்டதாகவும், அலெக்சியின் மரணத்தின் பின்னணியில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அது பொய் என்று கூறும் அலெக்சியின் சட்டத்தரணிகள், அவர்கள் அலெக்சியின் உடலைத் தராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்துவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்