வேலை நிறுத்தம்! - மூடப்பட்டுள்ள ஈஃபிள் கோபுரம்!

19 மாசி 2024 திங்கள் 11:12 | பார்வைகள் : 11465
ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று பெப்ரவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.
ஈஃபிள் கோபுரத்தை பராமரிக்கும் SETE அமைப்பு ஊழியர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தினை முடித்துக்கொண்டு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஈஃபிள் கோபுரத்தின் மேல் தளங்கள் மூடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அதற் முற்றவெளி பகுதிகளை இலவசமாக பயன்படுத்த முடியும்.
முன்பதிவு செய்துள்ளவர்கள் தங்களுடைய முழுமையான தொகையினை மீளப்பெற முடியும் அல்லது திகதியை பிற்போட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1