Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எலி பிரச்சினையால் ஒருவர் பலி

இலங்கையில் எலி பிரச்சினையால் ஒருவர் பலி

19 மாசி 2024 திங்கள் 11:26 | பார்வைகள் : 9292


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வசிக்கும் வீட்டினுள் எலி புகுந்தது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மயங்கி விழுந்து   இளைய சகோதரர் சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்தை ஆராச்சியைச் சேர்ந்த அனுர கித்சிறி என்ற (59) வயதுடைய ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார், மூத்த சகோதரன் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், திங்கட்கிழமை (19) காலை இரண்டு மகள்களும் மனைவியும் சொந்த தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது  இரு சகோதரர்கள் மட்டுமே வீட்டில்  தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்