Paristamil Navigation Paristamil advert login

'RSA' அரச உதவித்தொகையினை பெறுபவர்கள் இம்மாதம் முதல் CAFல் பதிவு செய்யும் போது அவதானம்.

'RSA' அரச உதவித்தொகையினை பெறுபவர்கள் இம்மாதம் முதல் CAFல் பதிவு செய்யும் போது அவதானம்.

20 மாசி 2024 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 7037


அரச உதவித்தொகையான Revenu de Solidarité Active (RSA) பெறும் பயனாளர்கள் இம்மாதம் முதல், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பெறும் சம்பளத் தொகையினை allocation familiale (CAF) இணையத்தளத்திலோ, பத்திரத்திலோ பதிவு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பு ஒவ்வொரு மூன்று மாதங்களின் சம்பளத் தொகையினை பதியும் போது 'Net à Payer' என்பதற்கு நேராய் இருக்கும் தொகையினை பதிவு செய்வதே வழக்கமாக இருந்தது, இம்மாதம் முதல் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் சம்பளத் தாளில் 'Net SOCIAL' என்பதற்கு நேராய் இருக்கும் தொகையினையே பதிவு செய்ய வேண்டும். என allocation familiale (caf) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்