உக்ரைன் நாட்டுக்கு 800 ட்ரோன்களை வழங்கும் கனடா
20 மாசி 2024 செவ்வாய் 15:28 | பார்வைகள் : 5379
ஒன்றாரியோவில் உற்பத்தி செய்யப்பட்ட 800 ட்ரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்கொடையாக இந்த ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷ்ய படையினருக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக இந்த ட்ரோன்களன் வழங்கப்பட உள்ளன.
சுமார் 95 மில்லியன் டொலர் பெறுமதியான ட்ரோன்கள் இவ்வாறு உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் பில் பிலயர் தெரிவித்துள்ளார்.
3.5 கிலோ கிராம் எடையுடை இந்த ட்ரோன்கள் புலனாய்வுத் தகவல் திரட்டல் மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் படையினருக்கு கூடுதல் எண்ணிக்கையில் ட்ரோன்கள் தேவைப்படுவதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனுக்கு கனடா தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகினறமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan