Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் உக்ரைன் ஜெலென்ஸ்கி வேண்டுகோள்

சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் உக்ரைன் ஜெலென்ஸ்கி வேண்டுகோள்

20 மாசி 2024 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 2313


போர்க்களங்களில் தாமதங்கள் ஏற்படுவதால் இராணுவ மற்றும் மனிதாபி உதவிகளை விரைந்து வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி திங்கட்கிழமை சர்வதேச கூட்டாளிகளிடம் வேண்டுகோள் விடுத்து கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் ரஷ்யா போரின் சமீபத்திய போர் நடவடிக்கையாக, உக்ரைன் படைகள் முக்கிய மூலோபாய நகரத்திலிருந்து தந்திரோபாய ரீதியான பின்வாங்கலை நடத்தினர்.

இதன் விளைவாக ரஷ்யா கிழக்கு உக்ரைன் நகரமான ஆவிடியிவ்(Avdiivka) கைப்பற்றியதாகக் கூறியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் திறன் மற்றும் வெடிமருந்து தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது தங்கள் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற இது ஒரு தந்திரோபாய முடிவு என்று உக்ரைன் இராணுவத் தலைவர் ஓலெக்சாண்டர் சிர்கி(Oleksandr Syrskyi), பின்வாங்கலை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், போர்க்களங்களில் ஏற்படும் தாமதங்கள் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகவும், மனிதாபிமான நிலைமையை மோசமாக்குவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீரங்கிகளின் பற்றாக்குறை உள்ளது என்றும், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய முன்னேற்றங்களை எதிர்கொள்ள கனரக ஆயுதங்களை விரைந்து வழங்குமாறும் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிரிழப்புகள் அதிகரிப்பு: போர்க்களத்தில் உக்ரைன் வீரர்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. 

ஆயுதங்கள் இல்லாததால், ரஷ்ய படைகளின் தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் போகிறது.

மக்கள் பாதிப்பு: போர்க்களங்களில் நீடிக்கும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

குடியிருப்புகள், உட்கட்டமைப்புகள் சேதமடைகின்றன. 

மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

போரின் நீடிப்பு: போர்க்கருவிகளின் தாமதம் போரை நீட்டிக்கச் செய்து, இரு தரப்பினருக்கும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை அதிகரிக்கச் செய்யும். 


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்