விவசாயக்கண்காட்சிகளின் போது பரிசில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
20 மாசி 2024 செவ்வாய் 17:26 | பார்வைகள் : 14799
இவ்வார சனிக்கிழமை பெப்ரவரி 24 ஆம் திகதி சர்வதேச விவசாய கண்காட்சி (Salon international de l’agriculture) ஆரம்பமாகிறது. அன்றைய நாளில் பரிசில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை விவசாயிகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
முதன் நாளான பெப்ரவரி 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் பரிசுக்கு வருகை தரும் விவசாயிகள், தங்களது உழவு இயந்திரங்கள் மூலம் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Sèvres-Lecourbe மெற்றோ நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
FNSEA மற்றும் Jeunes agriculteurs எனும் இரு விவசாய தொழிற்சங்கத்த உறுப்பினர்களே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
60 ஆவது சர்வதேச விவசாயக் கண்காட்சி பெப்ரவரி 34 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை Porte de Versailles பகுதியில் இடம்பெற உள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan