Paristamil Navigation Paristamil advert login

காணவில்லை  - உதவி கோரும் ஜோந்தார்மரி!

காணவில்லை  - உதவி கோரும் ஜோந்தார்மரி!

20 மாசி 2024 செவ்வாய் 18:28 | பார்வைகள் : 6043


கடந்த 11ம் திகதியிலிருந்து  Deux-Sèvres இலுள்ள Moncoutant-sur-Sèvre இல் ஏர்வான் (Erwan) எனும் 18 வயது இளைஞன் காணாமற்போயுள்ளார்.

ஜோந்தார்மினர் மோப்ப நாயுடன் பெரும் தேடுதல் வேட்டைகளை நடாத்தியும் இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இங்கிருக்கும் களியாட்ட விடுதி க்கு (discothèque) சென்ற இந்த இளைஞன் வீடு திரும்பியிருக்கவில்லை.

இந்த களியாட்ட விடுதி உரிமையாளர் மீது ஏர்வானின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். 'கவனமின்மை', 'பொறுப்பின்மை', 'ஆபத்தில் இருந்தவரிற்கு உதவாமை' போன்ற குற்றங்களை பெற்றோர் சுமத்தியுள்ளனர்.

களியாட்ட விடுதிக்குச் சென்ற இவர் கடும் மதுபோதையில் களியாட்ட விடுதியின் வாகனத் தரிப்பிடத்தில் தனியாக நின்றதைப் பார்த்தவர்கள் சாட்சி கூறியுள்ளனர்.

1m70 உயரமுள்ள இந்த இளஞனை யாரும் கண்டால், உடனடியாகத் தங்களிற்கு 05.49.72.60.01 என்ற இலக்கத்திற்கு அல்லது 17 இற்கு அழைக்கும்படி ஜோந்தார்மினர் அறிவித்துள்ளனர்.

தொடந்தும் தேடுதலை ஜோந்தார்மினர் நடாத்தி வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்