நாடுகடத்தலிற்கு 92 சதவீத மக்கள் ஆதரவு!!
20 மாசி 2024 செவ்வாய் 18:56 | பார்வைகள் : 4885
பிரான்சிற்கு எதிராக, கடும் இஸ்லாமிய ஜகாதிப் பயங்கரவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் துனிசிய இமாமின் வதிவிட உரிமையபை; பறித்து, நாடுகடத்த உள்துறை அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல ஊடகம் பெரும் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.
எந்த விதமான மேல் முறையீட்டிற்கும் சந்தர்ப்பம் வழங்காது, உடனடியாக, இமாம் மஹ்ஜுப் மஹ்ஜுபியை நாடுகடத்த 92 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில் 7 சதவீத மக்கள் நாடுகடத்தலிற்கு எதிராகவும், 1 சதவீத மக்கள் எந்தப் பதிலும் அளிக்காமலும், இருந்ததாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சிற்கு எதிரான, பயங்கரவாதப் பிரச்சாரம் செய்தமைக்காக மஹ்ஜுப் மஹ்ஜுபிக்கு எதிராக பயங்கரவாதத் தடைப்பிரிவு விசாரணைகளை ஆரம்பிக்க, இவர் பிரச்சாரம் செயய்யும் பள்ளிவாசல் உள்ள பன்யோலே-சூர்-செஸ் (Bagnols-sur-Cèze - Gard) நீதிமன்றம் ஆணையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.