மருத்துவ சந்திப்பை கனம் பண்ணாவிட்டால் வரி வசூலிக்கப்படும். "taxe lapin"
21 மாசி 2024 புதன் 08:06 | பார்வைகள் : 5250
பிரான்சில் மருத்துவரைச் சந்திக்க நேரம் எடுத்து விட்டு, எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி சமூகமளிக்க தவறும் நோயாளர்களுக்கு மருத்துவ சத்திப்பை கனம் பண்ணாவிட்டால் "taxe lapin" எனும் வரி வசூலிக்க அரசு ஆயத்தமாகி வருகிறது என சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக்கான அமைச்சர் Catherine Vautrin தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட விசேட கருத்துக்கணிப்பில் பிரான்சில் மருத்துவரைச் சந்திக்க நேரம் எடுத்து விட்டு, (rendez-vous) எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி சமூகமளிக்க தவறும் நோயாளர்கள் ஆண்டொன்றுக்கு 6% முதல் 10% வரை அதாவது 27 மில்லியன் சந்திப்புகள் வீணாக்கப் படுகிறது என தெரியவந்துள்ளது.
கூடுதலாக பல் மருத்துவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், மருத்துவர்கள் மட்டுமன்றி இன்னுமொரு நோயாளருக்கும் மருத்துவரை சந்திக்கும் நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது.
எனவே மக்களின் குறித்த அசமந்தப் போக்கான செயலை இல்லாதொழிக்க அவர்களுக்கு "taxe lapin" என்னும் வரியை விதிப்பதன் மூலம் கட்டுப்படுத்த அரசு ஆராய்ந்து வருகின்றது.