இலங்கையில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
4 ஆவணி 2023 வெள்ளி 03:03 | பார்வைகள் : 13183
செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மைய பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி, 1,465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது.
அதன் பிறகு டிசம்பர், பெப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பொருட்களின் ஒரு பகுதி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.


























Bons Plans
Annuaire
Scan