Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் அணு ஆயுதங்கள் வைப்பது தொடர்பில்  ரஷ்யா...

விண்வெளியில் அணு ஆயுதங்கள் வைப்பது தொடர்பில்  ரஷ்யா...

21 மாசி 2024 புதன் 10:31 | பார்வைகள் : 3261


ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்க வெள்ளை மாளிகை, சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத் திறனை ரஷ்யா பெற்றுள்ளதாக கடந்த வாரம் கூறியது.

தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ரஷ்யா மீது இந்த குற்றச்சாட்டை வைத்தார். ஆனால், அந்த ஆயுதம் அணுசக்தி திறன் கொண்டதா என்பது குறித்து கருது தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டுக்கு புடின் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

'எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது மற்றும் வெளிப்படையானது; விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதை நாங்கள் எப்போதும் எதிர்க்கிறோம். இதற்கு நேர்மாறாக இந்த துறையில் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிக்குமாறு அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்' என தெரிவித்துள்ளார்.  

தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உடனான சந்திப்பின்போது இதனை கூறிய புடின், ''அமெரிக்கா உட்பட மற்ற நாடுகள் கொண்டிருக்கும் விண்வெளி திறன்களை மட்டுமே ரஷ்யா உருவாக்கியுள்ளது; அது அவர்களும் தெரியும்'' என குறிப்பிட்டார்.

விண்வெளி சுற்றுப்பாதையில் அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களை நிலைநிறுத்துவதை தடை செய்யும் ஒப்பந்தத்தில் ரஷ்யா உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்