Paristamil Navigation Paristamil advert login

முதல் பாலிவுட் படத்திற்கே விருது பெற்ற நயன்..!

முதல் பாலிவுட் படத்திற்கே விருது பெற்ற நயன்..!

21 மாசி 2024 புதன் 12:11 | பார்வைகள் : 4049


நடிகை நயன்தாரா பாலிவுட் திரையுலகில் முதல் திரைப்படமாக ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்தில் நடித்த நிலையில் முதல் பாலிவுட் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவரது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்த நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்ததற்காக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் என்பதை நயன்தாரா நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் அவரது பதிவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்