Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் போர்  ஜேர்மனிக்கு ஏற்பட்டுள்ள செலவு... 

உக்ரைன் போர்  ஜேர்மனிக்கு ஏற்பட்டுள்ள செலவு... 

21 மாசி 2024 புதன் 14:24 | பார்வைகள் : 2731


உக்ரைன் போரால் ஜேர்மனிக்கு 200 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான அளவுக்கு செலவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

ஜேர்மன் பொருளாதார ஆய்வு நிறுவனம் (German Institute for Economic Research - DIW) இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் தலைவரான Marcel Fratzcher, நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், உக்ரைன் போர் காரணமாக, இரண்டு ஆண்டுகளில் ஜேர்மனிக்கு 200 பில்லியனுக்கு அதிகமான அளவுக்கு செலவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேல், உயர் ஆற்றல் செலவுகளால் ஜேர்மனியின் வளர்ச்சி 2.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் அவர்.

மேலும், அதிகரித்துவரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளால், குறிப்பாக சீனாவுடனான முரண்பாடுகளால் மேலும் அதிக செலவுகள் ஜேர்மனிக்கு ஏற்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார் Marcel Fratzcher.

உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள செலவுகள், ஜேர்மன் மக்களை, குறிப்பாக, குறைந்த வருவாய் கொண்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளன என்று கூறும் அவர், அதனால் அவர்கள், உயர் வருவாய் கொண்ட மக்களைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு பணவீக்கத்தை அனுபவித்துவருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராத உக்ரைன் போருக்காக செய்யப்படும் செலவுகள் குறித்து, சில நாடுகளில், மெல்ல சலிப்பு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்