பஞ்சாப்-அரியானா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
21 மாசி 2024 புதன் 15:27 | பார்வைகள் : 2083
விவசாயிகளுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் திட்டமிட்டபடி இன்று டில்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தியதில் பஞ்சாப் -அரியானா மாாநில எல்லையில் வன்முறை சம்பவம் ஏற்பட்டது. இதில்ஒருவர் பலியானார்.மேலும் போலீசார் உள்பட 160 காயமடைந்தனர்.
விவசாய விளை பொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை சமீபத்தில் துவக்கினர்.
அவர்கள், பஞ்சாப் - ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசு தரப்புக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த சில நாட்களாக நடத்திய பல சுற்று பேச்சில் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் கடந்த 19ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பிப்.21-ம் தேதி ‛‛டில்லி நோக்கி '' பேரணி துவக்க போவதாக விவசாய சங்க அமைப்பினர் அறிவித்தனர்.
இதையடுத்து இன்று திட்டமிட்டபடி 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,200 டிராக்டர்களுடன் டில்லி நோக்கி பேரணியை துவக்கினர். இவர்களை பஞ்சாப் - அரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு வன்முறைாக மாறியது.
இதில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தை கலைக்க முயன்றனர். இச்சம்பவத்தில் சுப கரண்சிங் என்ற விவசாயி போலீஸ் தாக்கியதி்ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தா்ர். மேலும் 160-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர். இசம்பவத்தால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
இ்ந்நிலையில் விவசாயிகள் தங்களின் பேரணியை இரண்டு நாட்கள் ஒத்திவைத்து உள்ளதாகவும் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேரணியை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.