Paristamil Navigation Paristamil advert login

கோலாகலமாய் நடந்த ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம்

கோலாகலமாய் நடந்த ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம்

21 மாசி 2024 புதன் 15:55 | பார்வைகள் : 4610


நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் “புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமலின் 'இந்தியன் 2' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

ஹிந்தி தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்தார் ரகுல் ப்ரீத் சிங். இவர்களது காதலுக்கு இருவீட்டாரம் சம்மதம் சொல்ல தற்போது கோவாவில் இவர்களின் திருமணம் இன்று(பிப்., 21) கோலாகலமாய் நடந்தது. கடந்த சில தினங்களாக கோவாவில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடந்து வந்த நிலையில் இன்று காலையில் சீக்கிய முறைப்படி திருமணம் நடந்தது. மாலையில் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் ஷில்பா ஷெட்டி, அர்ஜூன் கபூர், வருண் தவான், ஆதித்யா ராய் கபூர், அனன்யா பாண்டே, ஷாகித் கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்றனர்.

ரகுல் - ஜாக்கி ஆகியோர் தங்களது திருமணத்தை 'பசுமை திருமணம்' என்ற பெயரில் நடத்துகின்றனர். அதாவது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்