சீனாவில் தொலைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடு விதிப்பு
4 ஆவணி 2023 வெள்ளி 06:29 | பார்வைகள் : 17751
தற்போதைய காலக்கட்டங்களில் தொலைபேசி பாவணையானது அதிகரித்தே காணப்படுகின்றது.
இந்நிலையில் தொலைபேசி பாவணையானது மக்களின் வாழ்க்கையை சீரழிந்து வருகின்றது.
தொலைப்பேசியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைப்பேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதற்கமைய, சீனாவில் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றில் 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு மணித்தியாலமும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே அலைபேசியை பயன்படுத்த முடியும்.
அத்துடன், 18 வயதுக்குட்பட்டவர்களின் தொலைப்பேசியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணைய பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan