பரிஸ் : தொடருந்து நிலையத்தின் கதவில் ஏற முற்பட்டவர் - படுகாயம்!

21 மாசி 2024 புதன் 19:50 | பார்வைகள் : 9716
மெற்றோ நிலையம் ஒன்றின் கதவில் ஏற முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து கால்களை முறித்துக்கொண்டுள்ளார்.
நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள La Motte-Picquet Grenelle மெற்றோ நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.25 மணி அளவில் குறித்த மெற்றோ நிலையத்துக்கு வருகை தந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், நிலையத்தின் முகப்பு வாயிலில் ஏற முற்பட்டுள்ளார்.
கதவின் உச்சியில் ஏறிய அவர், அங்கிருந்து தவறி விழுந்துள்ளார். அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தலையிட்டு, குறித்த நபரை மீட்டு Georges Pompidou மருத்துவமனையில் சேர்த்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1