Livry-Gargan : குடும்ப வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை தேடும் காவல்துறை!

22 மாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 8472
பெண் ஒருவரையும் அவரது பிள்ளைகளையும் தாக்கிய ஒருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 114 எனும் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றுள்ளனர். அங்கு பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் தாக்கப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் முகத்தில் காயங்களும் வீக்கமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் மேற்கொண்டது குறித்த பெண்ணின் தற்போதைய காதலன் எனவும், அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தேடப்பட்டு வருகிறார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1