Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல் பாகங்கள் கண்டுப்பிடிப்பு!

கனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல் பாகங்கள் கண்டுப்பிடிப்பு!

4 ஆவணி 2023 வெள்ளி 06:33 | பார்வைகள் : 2962


கனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல்களின் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் மாக்டாலன் தீவுகளில் இந்த கப்பல் இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் சுழியோடிகளினால் இந்த கப்பல் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

18ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பல்களின் பாகங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டுளு;ளனர்.

ஆய்வாளர் ஜேன் சிமோன் ரிச்சர்ட் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கப்பல் பாகங்கள் இதுவரையில் எவரினாலும் கண்டு பிடிக்கப்படாதவை என ஆய்வாளர் ஜேன் சிமோன் தெரிவிக்கின்றார்.

ஒரு கப்பலின் பாகத்தை கண்டு பிடிப்பதே மிகவும் அரிய விடயம் எனவும் ஏழு கப்பல்களின் பாகங்களை கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை மிகவும் அரிய சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் பாகங்களின் பாகங்களின் நிலை, அவை எந்தக் காலப்பகுதிக்கு உரியவை என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்