Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் போர் - ஏவுகணை தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் பலி

உக்ரைன் போர் - ஏவுகணை தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் பலி

22 மாசி 2024 வியாழன் 09:25 | பார்வைகள் : 5831


உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில்  முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக பிபிசி தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பெருமளவு ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஷ்ய அதிகாரியொருவர் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சைபீரியாவை தளமாக கொண்ட படையணியின் படையினர் ட்ருடொவ்ஸ்கே கிராமத்திற்கு அருகில் உள்ள பயிற்சி தளத்தில் தளபதியொருவரின் வருகைக்காக காத்திருந்தவேளை உக்ரைனின் ஏவுகணைகள் அவர்களை தாக்கியுள்ளன.

தங்களை தங்களின் தளபதிகள் திறந்தவெளியொன்றில் நிற்கவைத்திருந்தனர் அவ்வேளை ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ரஷ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தளத்தில் உயிரிழந்த நிலையில் பல ரஷ்ய வீரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன,


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்