Paristamil Navigation Paristamil advert login

பூமியில் விழப்போகும் செயற்கைகோள்! விஞ்ஞானிகள் அச்சம்

பூமியில் விழப்போகும் செயற்கைகோள்! விஞ்ஞானிகள் அச்சம்

22 மாசி 2024 வியாழன் 09:51 | பார்வைகள் : 1879


செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. 

''Grandfather'' எனும் செயற்கைகோளை 1995ஆம் ஆண்டு ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

ஓசோன் படலத்தை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள், ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது.

இந்த நிலையில் Grandfather செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 'செயற்கைகோளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என கூற முடியவில்லை. 

ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். 

ஆனால், சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருக்கிறது' என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் Grandfather செயற்கைகோள் பூமியில் விழலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்