இலங்கையில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
22 மாசி 2024 வியாழன் 13:47 | பார்வைகள் : 1926
கடும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பச் சுட்டெண் அதிகமாக காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக உடல் சோர்வு உஷ்ணத்துடன் தொடர்புடைய நோய்கள் என்பன ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இது குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் வெப்பமான வானிலையுடன் சிறுவர்களிடையே தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சிறுவர்கள் சூரிய ஒளியில் உலாவுவதை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.