எயார் பிரான்ஸ் விமானத்துக்கு வர்ணம் பூசிய ஒன்பது பேருக்கு குற்றப்பணம்!
22 மாசி 2024 வியாழன் 18:57 | பார்வைகள் : 5292
எயார் பிரான்ஸ் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றுக்கு வர்ணம் பூசிய ஒன்பது பேருக்கு குற்றப்பணம் அறவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒன்பது பேருக்கும் €700 தொடக்கம் €1200 யூரோக்கள் வரை குற்றப்பணத்தை நேற்று புதன்கிழமை பொபினி நகர நீதிமன்றம் (Seine-Saint-Denis) அறவிட்டது. அத்தோடு அவர்களை Roissy மற்றும் Boueget நகர விமான நிலையங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என தெரிவிக்கும் அவர்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு Roissy விமான நிலையத்துக்குள் நுழைந்து, ஓடுபாதையில் நின்றிருந்த விமானம் ஒன்றுக்கு பச்சை நிற வர்ணத்தை தீட்டியுள்ளனர்.
21 தொடக்கம் 26 வயதுடைய குறித்த ஒன்பது பேருக்கும் நேற்று குற்றப்பணம் அறவிடப்பட்டது.