Paristamil Navigation Paristamil advert login

◉ விசேட செய்தி : சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!

◉ விசேட செய்தி : சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!

22 மாசி 2024 வியாழன் 21:05 | பார்வைகள் : 9675


சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் (இமாம்) Mahjoub Mahjoubi நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் உள்துறை அமைச்சர் Gérald Darmanin இத்தகவலை அறிவித்தார். இன்று வியாழக்கிழமை பெப்ரவரி 22 ஆம் திகதி காலை அவர் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டியவர் என உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சற்று முன்னர் அவர் வெளியேற்றப்பட்டதாக அமைச்சர் அறிவித்துள்ளார். தீவிர மதவாத மற்றும் அடிப்படை வாத சிந்தனை கொண்ட அவர், பலநூறு மாணவர்களுக்கு மத போதனை செய்வதாகவும், பிரான்ஸ் மீது அதீத வெறுப்பு கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துனிசியாவைச் சேர்ந்த அவர், அண்மையில் பல காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் பல ஆபத்தான விஷம சிந்தனைகளை விதைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்