Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய தூதுவரை கடுமையாக எச்சரிக்கும்  கனடா

ரஷ்ய தூதுவரை கடுமையாக எச்சரிக்கும்  கனடா

23 மாசி 2024 வெள்ளி 04:38 | பார்வைகள் : 7313


கனடாவிற்கான ரஷ்ய தூதுவரை அழைத்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் ஒல்க் ஸ்டெபாநொவை அழைத்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலியின் கோரிக்கைக்கு அமைய ஸ்டெபாநொவிடம் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த மரணம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை தூதுவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாவால்னியின் மரணம் தொடர்பில் பூரணமான வெளிப்படைத்தன்மையுடைய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.

நாவால்னியை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கொலை செய்தார் என உலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த மரணம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 

வர்த்தக‌ விளம்பரங்கள்