Paristamil Navigation Paristamil advert login

அவதானம் : Euphytose மாத்திரைகள் மீளப்பெறப்படுகின்றன!

அவதானம் : Euphytose மாத்திரைகள் மீளப்பெறப்படுகின்றன!

24 மாசி 2024 சனி 13:00 | பார்வைகள் : 6814


மன அழுத்தம் போன்ற நோய்களுக்காக பரிந்துரைக்கப்படும் Euphytose மாத்திரைகள் மீளப்பெறப்படுகிறதாக பிரெஞ்சு மருத்துவ சம்மேளனம் அறிவித்துள்ளது.

இறுதியாக தயாரிக்கப்பட்ட Euphytose மாத்திரைகளை பயன்படுத்துவோர் பலருக்கு காய்ச்சல், தலைவலி, ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு தயாரிக்கப்படும் இந்த மாத்திரைகளின் விநியோக இலக்கங்கள் SX2295 மற்றும் SX2297 ஆகியவற்றில் உள்ள மாத்திரைகளிலேயே மேற்படி பக்கவிளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மீள கையளித்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளவும் எனவும், அதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் குறித்த மாத்திரைகள் தூக்கமின்மை, தீவிர மன அழுத்தம் போன்ற நோய்களுக்காக பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்