சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை அறிவித்த சந்திரபாபு
24 மாசி 2024 சனி 08:16 | பார்வைகள் : 2473
ஆந்திர சட்டசபை தேர்தல் வரலாற்றில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவரது கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் வேட்பாளர் பட்டியலும் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. மறுபுறம், கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
அந்த வகையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி 151 இடங்களிலும், ஜனசேனா 24 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவானது.
இந்நிலையில், ஆந்திர தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் இணைந்து முதல்கட்டமாக 118 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
118 பேர் கொண்ட இந்த பட்டியலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 94 பேர்களும், ஜன சேனா சார்பில் 24 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.<br><br>பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 154 தொகுதிகளில் இருந்து பிரித்து கொடுப்பார் என அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.