Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

சீனாவில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

24 மாசி 2024 சனி 08:25 | பார்வைகள் : 2152


சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. 

இதனால் சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் சந்திர புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.

குறித்த சீரற்ற வானிலைக்கு மத்தியில் பயணிப்பதால் ஆங்காங்கே விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், சுஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

பனி படர்ந்த அந்த சாலை வழியாக பயணித்த சில வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிக்கொண்டே சென்று விபத்துக்குள்ளாகின.

பின்னால் வந்த வாகனங்களும் பனியில் சறுக்கிக்கொண்டு அவற்றின் மீது மோதி சேதமடைந்தன.

இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். 

போக்குவரத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்