இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் பூதவுடல்..

26 தை 2024 வெள்ளி 11:49 | பார்வைகள் : 6078
இலங்கையில் காலமான இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் சென்னை வந்தடைந்தது. திநகரின் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
பிரபலமான பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திரைத்துறையில் பவதாரிணி வலம் வந்தார். 'ராசய்யா' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான அவர்,'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு' என்ற பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார்.
இந்நிலையில், இலங்கையில் இருந்து அவரது உடல் சென்னை எடுத்து வரப்பட்டது. பவதாரிணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்து பெற்று, தி நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணி வரை சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல், அதன் பின் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதன் பின் பவதாரிணியின் கணவரது ஊரான லோயர் கேம் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை அங்கு அவரது இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் தி.நகர் இல்லத்தில் அரசியல் பிரபலங்கள் முதல், சினிமா பிரபலங்கள் என பலரும் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025