மிரட்டும் ‘கேப்டன் மில்லர்’ டீசர்!
28 ஆடி 2023 வெள்ளி 15:40 | பார்வைகள் : 4964
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12.01க்கு வெளியானது. இந்த டீசரில் தனுஷ் துப்பாக்கியையும் கோடாரியையும் வைத்துக்கொண்டு இதுவரை இல்லாத ஆக்ஷனில் மிரட்டியுள்ளார்.
டீசரில், படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. நடிகர் தனுசை வெளிநாட்டவர்கள் தேடுவது போல் தெரிகிறது. குறிப்பாக, நடிகை பிரியங்கா மோகன் கையில் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் கவர்ந்துள்ளது.
மேலும், தனுஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் மூவரின் இன்ட்ரோ காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜான் கொக்கன் வில்லத்தனம் காண்பிக்கிறார் உட்பட படம் முழுக்க சண்டை, துப்பாக்கி என புதுமையாக கவனம் ஈர்க்கிறது. இப்படி, முத்தமாக கேப்டன் மில்லர் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த டீசரில் “கேப்டன் மில்லர்” திரைப்படம் டிசம்பர் 15 ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் 90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட போர் புரியும் கிளர்ச்சியாளராக கொன்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி ராமலிங்கம் கலை இயக்கம் மற்றும் திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர்.