Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

27 தை 2024 சனி 07:40 | பார்வைகள் : 2002


காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது, 2024.01.26 சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் நேற்று இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

மேலும், இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டது.

1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்