Paristamil Navigation Paristamil advert login

கலிபோர்னியா பாலைவனத்தில்  6 சடலங்கள் மீட்டு - அதிர்ச்சியில் அதிகாரிகள்

கலிபோர்னியா பாலைவனத்தில்  6 சடலங்கள் மீட்டு - அதிர்ச்சியில் அதிகாரிகள்

27 தை 2024 சனி 08:45 | பார்வைகள் : 10317


கலிபோர்னியாவின் எல் மிராஜில் நெடுஞ்சாலை 395-ல் உள்ள மொஜாவேபாலைவன சாலை சந்திப்பில் ஆறு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் சான் பெர்னார்டினோ மாவட்ட ஷெரிப் அலுவலகத்தில் தொடர்புகொண்ட ஒருவர் எல் மிராஜ் பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 5 உடல்களை பொலிசார் முதலில் மீட்டுள்ளனர். 

புதன்கிழமை பகல் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தின் பின்னணி தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ஆனால் 6 பேர்களும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, சில உடல்கள் கொளுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

உடல்கள் மீட்கப்பட்ட பகுதியானது லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடகிழக்கே சுமார் 50 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. 

சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப பல மணி நேரங்களாகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த உடல்கள் அப்பகுதியில் எத்தனை நாட்கள் காணப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணை முன்னெடுத்துள்ளனர். 

மட்டுமின்றி, மீட்கப்பட்ட உடல்களின் அடையாளம் உட்பட வயது, பாலினம் என எந்த தகவலையும் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்