Val-d'Oise : தேவாலயத்தில் தீ விபத்து!

27 தை 2024 சனி 11:00 | பார்வைகள் : 12813
Viarmes (Val-d'Oise) நகரில் உள்ள தேவாலயம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
Viarmes நகரின் பெயரையே கொண்டுள்ள குறித்த தேவாயலத்தின் மணிக்கூண்டு பகுதி பிற்பகல் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருத்தப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் எரியத்தொடங்கியுள்ளன..
தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 70 தீயணைப்பு படையினர் வரை இணைந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிய முடிகிறது.
குறித்த தேவாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் திருத்தப்பணிகள் ஆரம்பித்திருத்து இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1