ஒரே மாதத்தில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்
27 தை 2024 சனி 11:06 | பார்வைகள் : 2204
பாகிஸ்தான் - பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 3 வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிம்மோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்து இருக்கிறது.
கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த அம்மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது.
குறித்த தடை உத்தரவு எதிரவரும் 31-ம் திகதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜனவரி 1-ம் திகதிலிருந்து பஞ்சாப் மாகாணத்தில் 10,520 பேருக்கு நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதில் உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது 5-க்கும் குறைவு ஆகும். மேலும் லாகூரை சேர்ந்த 47 பேர் உயிரிழந்துள்ளனர்.