முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
27 தை 2024 சனி 15:59 | பார்வைகள் : 1897
வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக அரசு முறைப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் புறப்பட்டார். முதலில் துபாய் சென்று அங்கிருந்து ஸ்பெயின் செல்கிறார். அங்கு முதலீட்டாளர்கள் ,அரச பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி,
8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். இந்தியாவில் முதலீடு செய்ய தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் என எடுத்துரைப்பேன். கடந்த முறை துபாய் பயணத்தின் போது ரூ. 6 ஆயிரத்து 100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஸ்பெயின் பயணத்தை முடித்துவிட்டு பிப்.07ல் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளேன் என்றார்.