Rungis சந்தையை முடக்க திட்டமிடும் விவசாயிகள்!!

27 தை 2024 சனி 17:07 | பார்வைகள் : 8146
இல் து பிரான்சுக்கான மிகப்பெரும் சந்தையாக திகளும் Rungis இனை முடக்கும் முயற்சியினை விவசாயிகள் முன்னெடுக்க உள்ளனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், அடுத்த சில நாட்களில் இந்த சந்தையை முடக்கும் திட்டத்தில் உள்ளனர். Lot-et-Garonne மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதனை அறிவித்துள்ளனர். பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதுக்குமான மிகப்பெரிய சந்தைத் தொகுதியாக உள்ள இதற்கு பொருட்கள் வருவதையும், விற்பனையாவதையும் தடுக்க உள்ளனர்.
இதனால் பல மில்லியன் யூரோக்கள் தினமும் நஷ்ட்டமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கேப்ரியல் அத்தால் நேற்றைய தினம் வியசாயிகளுடன் உரையாடி பல்வேறு சலுகைகளை அறிவித்தார். என்ற போதும் அவற்றுக்கு விவசாயிகள் செவிசாய்க்கவில்லை.