‘விடாமுயற்சி’ யைத் துரத்தும் அடுத்த சிக்கல்...
28 தை 2024 ஞாயிறு 08:33 | பார்வைகள் : 10883
அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம், எதிர்பாரா வகையிலான அடுத்த சிக்கலை சந்தித்து இருப்பதால் படக்குழுவினர் சோர்ந்து போயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
’துணிவு’ திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த திரைப்படமாக ’விடாமுயற்சி’ வளர்ந்து வருகிறது. ஆனால் எந்த நோக்கத்தில் விடாமுயற்சி எனப் பெயரிட்டார்களோ, படத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதில் விடாமுயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. படத்தின் இயக்குனர் விக்னேஷ்சிவன் என்பதிலிருந்து மகிழ்திருமேனியாக மாறியதில் முதல் தடுமாற்றம் எழுந்தது.
அடுத்ததாக விடாமுயற்சி படப்பிடிப்பு ஏற்பாடுகள் கிடப்பில் கிடக்க, அஜித் தனது நண்பர்களுடன் பைக்கில் உலக உலா செல்ல ஆரம்பித்தார். படம் தாமதமாகவதற்கு காரணம் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவா அல்லது தல அஜித்தா எனத் தெரியாது ரசிகர்களை தலையை பிய்த்துக்கொண்டனர். ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கிய போதும், அதன் போக்கை வெளிக்காட்டும் அப்டேட் ஏதுமில்லாது போனதில், படப்பிடிப்பு நடக்கிறதா அல்லது முடங்கிப்போனதா என்று விளங்காது ரசிகர்கள் மீண்டும் குழம்பினர்.
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணையும் நடிகர்கள் நடிகைகள் குறித்தான அப்டேட்டுகள் மட்டுமே படப்பிடிப்பு உயிர்ப்புடன் இருப்பதை உறுதிபடுத்தி வந்தது. அப்படி அஜர்பைஜான் தேசத்தில் விறுவிறுப்பாக தொடர்ந்து வந்த படப்பிடிப்பும் ஒரு கட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அஜர்பைஜானில் தற்போது நிகழும் காலசூழல் படப்பிடிப்புக்கு திடீர் சவாலாக எழுந்தது. இதனால் காத்திருந்து அங்கேயே படப்பிடிப்பை தொடரலாமா அல்லது இந்தியா திரும்பிவிட்டு சூழல் சரியானதும் வரலாமா என படக்குழுவினர் தடுமாறினர். தீவிர கலந்தாலோசனைக்குப் பின்னர் அஜர்பைஜான் படப்பிடிப்பை மூட்டை கட்டுவது என்றும், அதன் தொடர்ச்சியை இந்தியாவில் செட் போட்டு எடுப்பது என்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan