ஹமாஸ் அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் கத்தார் - நெதன்யாகு கடும் விமர்சனம்
28 தை 2024 ஞாயிறு 09:23 | பார்வைகள் : 2969
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
கத்தார் இப்போரில் முக்கிய மத்தியஸ்தர் பாத்திரத்தை வகிக்கிறது.
ஹமாஸை கத்தார் வழி நடத்துவதாகவும், அதற்கு நிதி அளிப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.
அதன் ஒருபகுதியாக இம்மாத தொடக்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
ஆனால், நெதன்யாகு கத்தாரின் மத்தியஸ்தர் பாத்திரத்தை விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'கத்தார் ஹமாஸை நடத்துகிறது மற்றும் நிதியளிக்கிறது.
மேலும், காசாவில் இன்னும் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க, பாலஸ்தீனிய குழுவிற்கு அழுத்தம் கொடுக்க இந்த நிலைப்பாட்டை பயன்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
கத்தாரில் பல மூத்த ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.