Paristamil Navigation Paristamil advert login

இடை நிலை அவசரபிரிவுடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு!

இடை நிலை அவசரபிரிவுடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு!

28 தை 2024 ஞாயிறு 16:05 | பார்வைகள் : 2051


பிரான்சின் இடைநிலை அவசரப்பிரிவுடன் (interministérielle de crise) உள்துறை அமைச்சர் Gérald Darmanin சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. Place Beauvau மாளிகைக்கு உள்துறை அமைச்சர் பயணிக்க உள்ளார்.  நாட்டில் நிலவி வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக நாடு ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில், இந்த சந்திப்பு மேற்படி சம்பவம் தொடர்பிலேயே இடம்பெற உள்ளது. 

விவசாயிகள் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில், அவசரகால சூழ்நிலை கருதி மேற்படி சந்திப்பு இடம்பெற உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்