இந்திய - இலங்கை படகு சேவை அடுத்த மாதம் ஆரம்பம்

29 தை 2024 திங்கள் 03:50 | பார்வைகள் : 3863
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ். காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டிணம் வரை இந்த படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, இந்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.