தலைநகரை முடக்க திட்டமிட்டுள்ள விவசாயிகள்! - 15,000 காவல்துறையினர் குவிப்பு!!
29 தை 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 4175
இன்று திங்கட்கிழமை காலை விவசாயிகள் தலைநகர் பரிசை முற்றுகையிட உள்ளனர். பரிசின் புறநகர் வீதிகள் அனைதிலும் உழவு இயந்திரங்களை நிறுத்தி சாலைமறியலில் ஈடுபட உள்ளனர்.
இந்த முற்றுகையை தவிர்க்கும் முகமாக இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் 15,000 காவல்துறையினரை குவிக்க உள்ளனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வழங்கிய அறிவுறுத்தலின் படி உள்துறை அமைச்சர் பாதுகாப்பினை பலபடுத்தியுள்ளார். என ஒரு உழவு இயந்திரங்களும் பரிசை நெருங்காதபடி தடுக்கும் படி காவல்துறையினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
"உழவு இயந்திரங்களை பரிசுக்குள் நுழைவதால் ஏற்படும் சிக்கல்களை தடுக்க வேண்டும்!" என ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளது.
விவசாயிகள் இன்று காலை Rungis சந்தையினையும், CDG விமான நிலையத்தையும் முடக்க திட்டமிட்டுள்ளமை குறிபிடத்தக்கது.