இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கிய ஐசிசி...!

29 தை 2024 திங்கள் 07:46 | பார்வைகள் : 6118
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதான இடைக்கால தடையை ஐசிசி நீக்கியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் படுமோசமான செயல்பாடுகளின் எதிரொலியாக, இலங்கை அரசு தங்கள் கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது.
மேலும், தலைவரை நியமிப்பது என இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருந்தது.
இதன் காரணமாக, ஐசிசி இலங்கை அணியை இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அந்த அணி இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, அந்நாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாக கூறியுள்ள ஐசிசி, அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அதன் மீதான தடையை நீக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1