Paristamil Navigation Paristamil advert login

மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஈரான்..!

மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஈரான்..!

29 தை 2024 திங்கள் 09:31 | பார்வைகள் : 8163


ஈரான் நாட்டில்  28 ஆம் திகதி வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மஹாடா (Mahda), கேஹான் – 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ – 1 (Hatef-1) என்ற மூன்று செயற்கைக்கோள்களையே ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிக்கு சரக்குகளை அனுப்பும் திறன் ஆகியவற்றை சோதிக்க பயன்படுத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஈரானின் ஏவுகணை சோதனைகள் கடந்த காலங்களில் பல தோல்விகளைக் கண்டிருந்தன.

இந்நிலையில் இஸ்ரேல் காஸா மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சோதனை நடவடிக்கையானது பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்