பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவி
29 தை 2024 திங்கள் 09:53 | பார்வைகள் : 2944
ஹமாஸ் அமைப்பானது ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதலிற்கு பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.
பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐ.நா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன.
உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐ.நா அமைப்பு கண்டித்துள்ளது.
உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக அந்த அமைப்பினை நம்பியிருக்கின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.
சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.
அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் சில பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளோம் விசாரணைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் யுத்தம் இடம்பெயர்வு அரசியல் நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் இந்த தடைகள் பொருத்தமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்